மக்கள் மத்தியில் தனது செல்வாக்கு வீழ்ச்சியடைந்துள்ளமையினை ஏற்றுக்கொண்டார் மஹிந்த!

மக்கள் மத்தியில் தனது செல்வாக்கு வீழ்ச்சியடைந்துள்ளமையினை எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஊடக நிறுவன பிரதானிகளை இன்று(செவ்வாய்கிழமை) சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டிருந்த அவர், ‘கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்காக மைத்திரி தரப்புடன் இணைந்து கொண்டோம்.

எனினும் அதற்கு முன்னர் மக்களின் மத்தியில் எமது தரப்பு தொடர்பாக காணப்பட்ட ஆர்வம் வீழ்ச்சியடைந்துள்ளது.

மக்களின் ஆர்வத்தை மீளவும் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒக்ரோபர் 26ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் பற்றி பேசப்படவில்லை.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டக்கூடிய வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.