மக்களின் அபிலாசைகளை மதிக்காத தமிழ் அரசியல்வாதிகளை நீக்கம் செய்வோம் – யாழில் மே தின நிகழ்வு

தமிழ் தேசியத்தையும் சமூக மாற்றத்தையும் முன்னிருத்தி மக்கள் சக்தியை உருவாக்குவோம், மக்களின் அபிலாசைகளை மதிக்காத தமிழ் அரசியல்வாதிகளை நீக்கம் செய்வோம் என வலியுறுத்தி 2019ஆம் ஆண்டுக்கான மே தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது.

இலங்கை ஆசிரியர் சங்கம், வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம், யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், புதிய அதிபர் சங்கம், வடமராட்சி கிழக்கு பிரதேச குழு ஆகியன இணைந்து இந்த நிகழ்வை நடத்தியிருந்தன.

இதன்போது இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உயிர்த்த ஞாயிறன்று உயிர்நீத்த உறவுகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி லெலுத்தப்பட்டது.

தேசம், இறைமை, சுயநிர்ணயம், சமஷ்டி அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண குரல் கொடுப்போம், இவை இல்லாத அரசியல் தீர்வுக்கு எதிராக குரல் கொடுப்போம், உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதல்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் உள்ளிட்ட 14 அம்சங்கள் மே தின பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.