மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது கோட்டாபய அரசு!

வேலையில்லாத பட்டதாரிகளை அரச சேவையில் பயிலுனர்களாக இணைப்பதற்கான நியமன கடிதங்கள் இன்று தபாலில் அனுப்பப்படும் என, பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

50,000 பட்டதாரிகளை அரச சேவையில் பயிலுனர்களாக இணைப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதிலும், சுமார் 40,000 விண்ணப்பங்கள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளதாக, அமைச்சின் செயலாளர் சிரிபால ஹெட்டியராச்சி தெரிவித்தார்.

இது தொடர்பான பணிகள் ஜனாதிபதி செயலகம் மூலம் ஒருங்கிணைக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நியமனங்களில், 80% ஆனோர் பாடசாலைகளில் பயிலுனர் ஆசிரியர்களாக இணைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.