மகிந்த தேசப்பிரியவின் சிபார்சில் அரச நியமனங்கள்?

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவின் குடும்ப உறவுகளிற்கு கோத்தபாய அரசு அரச நியமனங்கள் வழங்கிவருகின்றமை அம்பலமாகியுள்ளது.
தேர்தல் பெறுபேறு வெளியீட்டின்போது பணியாற்றிய லங்கா சொப்பெயார் பவுன்டேசன் நிறுவன ஊழியர்களிற்கே அரச பதவி வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறு வெளியீட்டில் பணியாற்றிய நிறுவன பணியாளர்களிற்கே அரச நியமனம் வழங்க கோத்தா உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே தனியார் நிறுவனத்தின் முகாமை மட்ட பணியாளர்களில் ஒருவராக ஆணைக்குழுவின் தலைவரின் சகோதரனும் உள்ளார் என அம்பலமாகியுள்ளது.

அதேவேளை மற்றுமோர் முகாமை மட்டப் பணியாளர் தலைவர் மகிந்த தேசப்பிரியவின் நண்பருமாவார்.

இந்த நிலையில் பெறுபேறுகள் வெளியிடும் சமயம் பணியாளர்கள் தவிர்ந்த நிறுவனப பணியாளர்களும் ஆணைக்குழுவிற்குள் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் கடும் அதிருப்தியும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த நிறுவனம்சார் பணியாளர்கள் சிலருக்கு தற்போது அரச பதவிகள் வழங்கப்படுவதனால் ஆணைக்குழுவில் மீண்டும் சலசலப்பு நிலவுகின்றது. இதேநேரம் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மேலும் குறிப்பிட்ட காலம் இப் பணியை இதே நிறுவனத்திடமே வழங்கப்படவுள்ளதாக ஆணைக்குழு உறுப்பினரொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.