மகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்டியில் நேற்று அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களுடன் மூடிய அறைக்குள் இரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கரான வேரகொட ஞானரத்ன தேரர், மற்றும் மல்வத்த பீடத்தின் மகாநாயக்கரான திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கள தேரர் ஆகியோருடனேயே சிறிலங்கா பிரதமர். இரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

அண்மைய நிலைமைகள் தொடர்பாக, இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சிறிலங்கா பிரதமர் தனிப்பட்ட முறையில் நடத்திய இந்தச் சந்திப்பில் தாம் பங்கேற்கவில்லை என்று கண்டியைச் சேர்ந்த அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY