பௌத்தர்களுக்கே சிங்கள மரபுரிமைகள் தொடர்பான உணர்வுகள் இருக்கும் – தயாசிறி ஜயசேகர காட்டம்

சிங்கள பௌத்த மரபுரிமைகள் தொடர்பான உணர்வுகள் சிங்கள பௌத்தர்களுக்கே இருக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

குருணாகலில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இரண்டாவது புவனேகபாகு மன்னனின் அரச மண்டபம் இடித்து அழிக்கப்பட்டமை குறித்து தயாசிறி ஜயசேகரவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருணாகல் மாவட்ட முதன்மை வேட்பாளரான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் பகிரங்கமாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

சிங்கள வரலாறு தொடர்பான புரிதல் சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரமே இருக்கின்றது எனக் கூறும் தயாசிறி ஜயசேகர, சிங்கள பௌத்தர் என்பதுடன் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சிங்கள கத்தோலிக்கர் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.