போர் குற்றங்களை ஓரங்கட்ட ஐ.நா பொதுச் சபையில் தீர்மானம்: சிறிலங்கா ஜனாதிபதி திட்டவட்டம்

சிறிலங்கா இராணுவம் உட்பட அரச படையினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல்களில் இருந்து முழமையாக விடுவித்துக்கொள்வதற்கானதீர்மானமொன்றை நிறைவேற்றும் நோக்கில் இம்முறை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் யோசணையொன்றை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா அரசதலைவர் மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபைக் கூட்டம் செப்டெம்பர் 18 ஆம்திகதி முதல் செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரிலுள்ளஐ.நா தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள தான் எதிர்வரும் செப்டெம்பர் 25ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் சிறிலங்காவிற்கு எதிராகசுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணும் யோசணைகள் அடங்கிய தீர்மானமொன்றைநிறைவேற்றும் பிரேரணையொன்றை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா அரச தலைவர்மைத்ரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழவிடுதலைப் புலிகளின் தளபதிகள், போராளிகள் மற்றும் சாதாரண மக்கள் ஆகியோர் படுகொலைசெய்யப்பட்டதாக சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியிலும்,அதேவேளை தற்போதைய மைத்ரி- ரணில் தலைமையிலான ஆட்சியிலும் முக்கியஅமைச்சராக பதவி வகித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்எஸ்.பி.திஸாநாயக்க செப்டெம்பர் 13 ஆம் திகதியான நேற்றைய தினம் கூறியிருந்தநிலையிலேயே சிறிலங்கா அரச தலைவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

சிறிலங்காவிலுள்ள பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் வானொலி, தொலைக்காட்சி உட்பட இலத்திரனியல் ஊடகங்களின் செய்திப் பிரிவுகளின் தலைமைஅதிகாரிகள் மற்றும் ஊடக நிறுனங்களின் தலைமை நிர்வாகிகள் ஆகியோரை இன்றைய தினம் கொழும்பிலுள்ளஜனாதிபதி செயலகத்தில் சிறிலங்கா அரச தலைவர் சந்தித்திருந்தார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நிவ்யோர்க்செல்லவுள்ள தான் ஐக்கிய நாடுகளின் புதிய மனித உரிமைகள் ஆணையாளரையும் முதன்முறையாகசந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்த சிறிலங்கா அரச தலைவர், அந்த சந்திப்பின் போது ஐ.நா பொதுச்சபைக்கு முன்வைக்கவுள்ள தீர்மானத்திற்கான பிரேரணையின் பிரதியொன்றை அவரிடம்சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான அரச சார்பற்ற நிறுவனங்களே 2009ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில்யுத்தக் குற்றங்களிலும், மனிதகுலத்திற்கு எதிரான கொடூரங்களிலும் சிறிலங்கா இராணுவத்தினர் உட்பட அரச படையினர் ஈடுபட்டுள்ளதாகதொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருவதாகவும் மைத்ரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குசரியான பதிலை வழங்காது தொடர்ச்சியாக உதாசீனமாக செயற்படட்தாலேயே சிறிலங்காவை ஐக்கியநாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகம் ஓரம்கட்டி வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளசிறிலங்கா அரச தலைவர், எனினும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதிஇடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஆட்சிபீடம் ஏறிய தான் தலைமையிலான தற்போதையதேசிய அரசாங்கம் துஸர விளகியிருந்த சர்வதேச சமூகத்துடன் மிக நெருக்கமான உறவைக்கட்டியெழுப்பியதாகவும், இதனால் சர்வதேச சமூகத்துடன் நட்புறவைமீண்டும் கட்டியெழுப்ப முடிந்துள்ளதாகவும் பெருமிதம் வெளியிட்டார்.

தனது அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் மூலம் சிறிலங்காவிற்கு தொடர்ச்சியாகஅழுத்தம் கொடுத்துவந்த உலக நாடுகளும், சர்வதேச சமூகமும் இன்று சிறிலங்காவிற்கு தேவையானஅனைத்து உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருவதுடன்,அழுத்தங்களையும் முமுழமையாக அகற்றிக் கொண்டுள்ளதாகவும் மைத்ரிபாலசிறிசேன சுட்டிக்காட்டினார்.

சர்வதேச சமூகத்துடன் சிறிலங்காவிற்கு ஏற்பட்டுள்ள இந்த நல்ல உறவைசரியாக பயன்படுத்திக்கொண்டுவரும் தேசிய அரசாங்கம், அதனாலேயே இம்முறை ஐ.நா பொதுச்சபையில் போர் குற்றங்கள் உட்பட நாட்டின் மீது சமத்தப்பட்டுவரும் மனித உரிமை மீறல்குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணும் யோசனையை நிறைவேற்றதத் தீர்மானித்ததாகவும்சிறிலங்கா அரச தலைவர் மைத்ரரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

அதேவேளை தேசிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் தேசியபாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுவரும்குற்றச்சாட்டுக்களில் எந்தவித உண்மையும் இல்லை என்றும் தெரிவித்துள்ள சிறிலங்காஅரச தலைவர், சிறிலங்கா இராணுவம் உட்பட முப்படையினரும் மிகவும் பலமான நிலையில்இருப்பதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தமிழர் தாயகப் பகுதி உட்பட நாட்டின் பல பாகங்களிலுள்ள நூற்றுக்கும்மேற்பட்ட இராணுவ முகாம்கள் மூடப்படவுள்ளதுடன், படையணிகள்களைக்கப்படவுள்ளதாகவும், இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்புபெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கி இருப்பதாகவும் சிறிலங்காாவின் முன்னாள் அரசதலைவர் மஹிந்த ராஜபக்ச, அவரது சகோதரரான முன்னாள்பாதுகாப்புச் செயலாளர் கோடட்ாபய ராஜபக்ச மற்றும் அவர்களது விசுவாசிகள் தொடர்ச்சியாககுற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் போரை முடிவுக்கு கொண்டுவரப்பட்ட காலப் பகுதியில் சிறிலங்காஇராணுவத்தின் தளபதியாக கடமையாற்றிய தற்போதைய தேசிய அரசாங்கத்தின் பிராந்தியஅபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவும்,இராணுவம் பலமிழந்துள்ளதாக கவலை வெளியிட்டிருந்ததுடன், தற்போதையஇராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் தூரநோக்கமற்ற நடவடிக்கைகள்காரணமாக பல பாதுகாப்பு சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும் என்றும்குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையிலேயே தேசிய பாதுகாப்பு எந்தவித அச்சுறுத்தலுக்கும்உள்ளாகவில்லை என்றும், இராணுவம் உள்ளிட்ட முப்படையினரும் பலமான நிலையிலேயேஇருப்பதாகவும் சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன ஊடகங்களின் தலைமைஅதிகாரிகள் மத்தியிலல் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.