போர்க்குற்றங்களிலிருந்து தப்பிக்கவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர் – மாவை

போர்க்குற்றவாளிகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செஞ்சோலை படுகொலையின் நினைவேந்தல் நிகழ்விலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் தற்போது தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காகவே நாட்டின் தலைவராக திட்டமிட்டுள்ளனர்.

போர்க்குற்றங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவே இவ்வாறு தலைமைத்துவத்தை பெற எண்ணுகின்றனர். இந்த விடயம் தொடர்பாக தமிழர்கள் நன்கு சிந்திக்க வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக சர்வதேசத்தினருடன் ஆலோசித்தே இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவுகளை எடுக்கும்” என்றும் அவர் கூறினார்.