போராட்டத்தை முடிக்கவே ரிஐடி விசாரணை

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவே பயங்கரவாத விசாரணை பிரிவு (ரிஐடி) இரண்டாம் மாடி விசாரணைக்குத் தன்னை அழைத்திருந்தார்கள் என்று காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் வவுனியா மாவட்டச் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தெரிவித்தார்.

வவுனியா வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்கு முன்பாக, 1,061 நாள்களாகத் தொடர்ந்து போராட்டம் மேற்கொள்ளும் பந்தலில், நேற்று (14) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.