போட்டியில் இறங்கும் மைக்ரோசாப்ட் லூமியா!

Lumia-535-hero1-jpgஸ்மார்ட்போன் விரும்பிகளின் டாப் சாய்ஸாக விளங்கும், ஆப்பிள் கடந்த மாதம் தனது ஐபோன்களில் 6S மற்றும் 6S பிளஸ் போன்றவற்றை வெளியிட்டது. இந்நிலையில், இந்த போன் மாடல்களுக்கு இணையான திறன்களுடன் இயங்கும், நெக்சஸ் ஸ்மார்ட்போனின், 5X மற்றும் 6P மாடல்களை கடந்த வாரம் வெளியானது.

இவை இரண்டுக்கும் போட்டியாக, நேற்று லூமியாவின் 950 மற்றும் 950 XL என இரண்டு மாடல்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மைக்ரோசாப்டின் பிரத்யேகமான விண்டோஸ்-10 உடன் வெளிவந்துள்ள இவை 5.2 மற்றும் 5.7 போன்ற இரு அளவுகளில் வெளிவந்துள்ளன. மேலும், இந்த ஸ்மார்ட்போன்கள் ஓ.எல்.ஈ.டி. திரையுடன் அமைந்துள்ளன. இவற்றின் பின்புறக் கேமராக்கள் 20 மெகா பிக்சல்களுடனும், மூன்று எல்.ஈ.டி. ப்ளாஷ்களைக் கொண்டுள்ளதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

3 ஜி.பி. ரேம் மற்றும் 32 ஜி.பி.-வரை இதனுல்லேயே சேமிக்கும் வசதியுடன் வெளிவந்துள்ள இவை, ஐபோன்களைக் காட்டிலும் குறைவான விலையில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் இதன் விலை 549 டாலர்களிலிருந்து (இந்திய மதிப்பில் சுமார் முப்பத்தைந்தாயிரம்) தொடங்குகிறது.

ஆகவே, ஐபோனுக்காக காத்திருக்கும் ஸ்மார்ட்போன் ரசிகர்கள், சற்றே யோசித்து முடிவெடுக்க வேண்டிய நேரமிது!

LEAVE A REPLY