போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப சென்னை ஐகோர்ட் உத்தரவு

ஊதிய நிலுவைத்தொகை, ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை முதல் அரசு போக்கு வரத்து தொழிற்சங்கங்கத்தினர் ஸ்டிரைக்கில்
ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் நேற்று மாலை முதல் அரசு பஸ்கள் ஓடவில்லை. பல இடங்களில் பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர். சென்னையில் நேற்றிரவு 90 சதவீத பஸ்கள் ஓடவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடாததால் இன்று 2-வது நாளாக தமிழ் நாடு முழுவதும் பொது மக்கள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள்.

இந்த ஸ்டிரைக்கை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், போக்குவரத்து ஊழியர் சங்கங்களுடன் பல கட்ட பேச்சு நடத்தப்பட்டது. அரசு ஒப்பந்தத்தை பல சங்கங்கள் ஏற்றுக் கொண்டன. தொமுச, சிஐடியு உள்ளிட்ட சில சங்கங்கள் தான் ஒப்பு கொள்ளவில்லை. அவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மக்கள் அவதிப்படுவதாக விளக்கமளித்தார்.

இதனை தொடர்ந்து நீதிபதிகள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது நோட்டீஸ் அளித்து நடவடிக்கை எடுக்கலாம். பணிக்கு வராதவர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும். ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட துறை ரீதியிலான நடவடிக்கையை எடுக்கலாம். பணிக்கு வராமல் மக்களுக்கு பணியாற்றாதவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும். ஓட்டுநர், நடத்துனர்கள் பணிக்கு வராவிட்டால் பணிநீக்கம் உள்ளிட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும்

ஊதியம் திருப்தி இல்லை என்றால், வேறு பணிக்கு செல்லலாம். போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

ஆம்புலன்ஸ், நர்சுகள் போராட்டத்தின் போது பல அறிவுரைகளை கோர்ட் வழங்கியுள்ளது எனக்கூறிய நீதிபதிகள், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சங்கங்கள் விளக்கமளிக்க அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY