பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரட்ன சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமனம்!

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டுடன் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே பொலிஸ் பொதுமக்கள் இணைப்புப்பிரிவின் பணிப்பாளராகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளராகவும் ஜாலிய சேனாரத்ன கடமையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.