பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை முன்னேற்றகரமான நகர்கிறது- மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் இலங்கை சற்று முன்னேற்றம் கண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிசேல் பெசேலே தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக பி.பி.சி.செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இலங்கை தொடர்பான 30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் ஊக்குவிக்கவும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுமாறு மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கண்காணிப்பதாகவும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை 2015 ஆம் ஆண்டில் யு.என்.எச்.ஆர்.சி தீர்மானம், 30/1 இலிருந்து விலகுவதற்கான ஒருமித்த முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.