பொறுப்புக்கூறல் பொறிமுறை ஆமைவேகம் -ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விசனம்!

பொறுப்புக்கூறல் பொறிமுறையில் குறைந்தபட்ச முன்னேற்றமே காணப்படுகின்றது. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படாத நிலை, இன வன்முறைகள், ஸ்திரமின்மை என்பன முக்கியமான விடயங்களாகும். இவை தொடர்பில் விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கை மீது ஐ.நா.வின் வகிபாகம் தொடரவேண்டும். மரண தண்டனை தொடர்பான தீர்மானத்தை கைவிடவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இன்று ஆணையாளரின் இலங்கை மீதான அறிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது. அதை ஆரம்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் எனது அலுவலகத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்றது. அதனை நான் மதிக்கின்றேன். நாம் தொடர்ந்து இலங்கைக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு தயாராகவுள்ளோம் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.