பொருள் உற்பத்தியில் முன்னணி சீனாவுக்கு அமெரிக்கா…’செக் 12 நாடுகளுடன் இணைந்து பிரம்மாண்ட வர்த்தக ஒப்பந்தம்

i3.phpபசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள, 12 நாடுகளை உள்ளடக்கிய, உலகின் மிகப் பெரிய பன்னாட்டு வர்த்தக ஒப்பந்தமாகக் கருதப்படும், ‘டிரான்ஸ் பசிபிக் பார்ட்னர்ஷிப்’ எனப்படும், டி.பி.பி., ஒப்பந்தம், நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் நேற்று கையெழுத்தானது. உலகம் முழுவதும் பரவியுள்ள, சீனாவின் பொருள் மற்றும் முதலீட்டு சந்தைகளை தகர்க்க வேண்டும் என்ற, அமெரிக்காவின் விருப்பத்தின் படி இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொருளாதாரம் வளர்ச்சி அடையும்!

* ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ள நாடுகளுக்கு இடையே, தடையற்ற, வரிகள் அதிகம் இல்லாத, வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்

* ஒப்பந்த நாடுகளுக்குள் பொருளாதார ஒத்துழைப்பு, நல்லுறவு, கூட்டு செயல்பாடு ஏற்படும்; பொருளாதாரம் வளர்ச்சி அடையும்
* ஐரோப்பிய யூனியன் அமைப்பு போல, ஒரே சந்தையாக உருவெடுக்க வேண்டும்.

உலக வர்த்தகத்தில் 40 சதவீதம்

* ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ள நாடுகளின் வர்த்தகம், உலக வர்த்தகத்தில், 40 சதவீதமாக உள்ளது
* மொத்தம், 80 கோடி மக்களை கொண்ட நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது
* ஐரோப்பிய யூனியன் போல, இரு மடங்கு பொருளாதார திறன் கொண்ட நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் இது.

சிக்கல்கள் என்னென்ன?

ஐந்தாண்டுகள் ரகசிய முயற்சிக்குப் பின், 11 நாடுகளை கையெழுத்திடச் செய்துள்ளது அமெரிக்கா. இதனால், உள்நாட்டில் பலத்த எதிர்ப்பை சம்பாதித்துள்ளது அந்நாடு. அமெரிக்காவின் வேலைவாய்ப்புகள், ஒப்பந்த நாடுகளுக்கு சென்று விடும் என, அமெரிக்க இளைஞர்கள் கருதுகின்றனர்
* ஒப்பந்தத்திற்கு அமெரிக்க பார்லிமென்டில் ஒப்புதல் பெற வேண்டும். இது, அதிபர் ஒபாமாவின் கனவு திட்டங்களில் ஒன்று. இந்த ஆண்டுடன் அவர் பதவியிலிருந்து வெளியேறுகிறார். அதன் பின் அமையும் அரசு, ஒப்பந்தத்தை ஏற்குமா என்பது தெரியவில்லை
* இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த ஒப்பந்தத்தை, ஒப்பந்த நாடுகள் ஏற்க வேண்டும் அல்லது, ஒப்பந்த நாடுகளின், 85 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட, ஆறு நாடுகள் ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும்; இல்லையேல்,
காலாவதியாகி விடும்
* சீனாவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் ஜப்பான், இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவாக இருந்தாலும், அந்நாட்டின் பொருளாதார அமைச்சர், பதவியிலிருந்து விலகியுள்ளதால், ஒப்பந்தம் பின்தங்கும் என கூறப்படுகிறது
* அமெரிக்காவின் அடக்குமுறைக்குள் ஆட்பட வேண்டிஇருக்கும் என, ஒப்பந்த நாடுகளில் எதிர்ப்பு காணப்படுகிறது.

உலக அளவில், நம் தொழிலாளர்கள், நம் பொருட்களுக்கு மதிப்பு குறைந்தது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது; அதை, இந்த ஒப்பந்தம் தகர்க்கும்; சீனாவின் ஆளுமையையும் நீக்கும்; அமெரிக்க பொருட்களை, ஒப்பந்த நாடுகளுக்குள் கொண்டு சேர்க்கும். அமெரிக்காவின் தலைமைத் தன்மையை வெளிநாடுகளிலும் உறுதிப்படுத்தும் ஒப்பந்தம் இது.பராக் ஒபாமா, அதிபர், அமெரிக்கா

இந்த நாள், முக்கியமான நாள். நியூசிலாந்து நாட்டிற்கு மட்டுமின்றி, 12 நாடுகளுக்கும் முக்கியமான நாள். இந்த ஒப்பந்தத்தை, அந்தந்த நாடுகளும் விரைவில் நிறைவேற்ற வேண்டும். இந்த ஒப்பந்தத்திற்கு, உறுப்பு நாடுகளிடையே ஆர்வம் காணப்படுவதால், இரண்டாண்டுகளில்
நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.ஜான் கீ, பிரதமர், நியூசிலாந்து

நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் இந்த ஒப்பந்தம் நேற்று கையெழுத்தான போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல நாடுகளைச் சேர்ந்த, நுாற்றுக்கணக்கானோர், ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டு, போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தனர்.

LEAVE A REPLY