பொன்.சிவகுமரனின் 70 ஆவது பிறந்த தினம்!

ஈழ விடுதலை போராட்டத்தின் முதலாவது போராளி பொன்.சிவகுமரனின் 70 ஆவது பிறந்த தினம் இன்று (புதன்கிழமை) நினைவு கூரப்பட்டது.

சிவகுமரன் நினைவுதின ஏற்பாட்டுக் குழுவினரின் ஏற்பாட்டில் இன்று காலை 8.30 மணிக்கு உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் இடம்பெற்றது.

ஏற்பாட்டு குமுவில் உறுப்பினர் செந்தூரன் தலமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.நிகழ்வில் சிவகுமாரனின் சிலைக்கு மாலை அனிவித்து,மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஏற்பாட்டிலும் காலை 10 மணிக்கு இடம்பெற்றது.