பொன்சேகாவின் நியமனத்தை ராஜபக்ஷ குடும்பமே தடுத்தது! மைத்திரி அதிரடி கருத்து!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்க தான் தயாராக இருந்ததாகவும், ஆனால் ராஜபக்ச குடும்பம் தான் அதனை தடுத்தது எனவும் அதிரடியாக கருத்துத் தெரிவித்துள்ளார்

நேற்றைய தினம் தனது வாசஸ்தலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம் பிக்களுக்கான விசேட கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தார். அங்க வைத்தே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவி்ககையில்,

சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவியை பொன்சேகாவுக்கு தாம் வழங்கவிருந்தபோதும் ராஜபக்ஷ குடும்பமே அதனை எதிர்த்ததாகவும், அவ்வாறு அவருக்கு பதவி வழங்கும் பட்சத்தில் அவர் பழிவாங்கலில் ஈடுபடுவார் என்றும் சொல்லப்பட்டதால் அந்த நியமனத்தை வழங்கவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

பாதுகாப்பு அமசை்சுப் பதவியை மஹிந்தவிடம் கொடுத்தால் அவராலும் சரிவர செய்ய முடியவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சரிவர செய்ய முடியவில்லை. ஆனால் இப்போது ரஞ்சித் மத்துமபண்டாரவை பாதுகாப்பு அமைச்சராக மீண்டும் நியமிக்குமாறு என்னிடம் ரணில் தலைமையில் ஒரு குழுவினர் வந்து கேட்டனர்.

ஏற்கனவே அவரால் ஏதும் செய்யமுடியாமற் போனதால் ஆடை உடுத்திக் கொண்டா இதனை என்னிடம் கேட்கிறீர்கள் என்று நான் ரணிலிடம் கேட்டேன் எனவும் தெரிவித்திருந்தார் என கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மேலும் நடைபெற்ற கொடூர தற்கொலை தாக்குதல் தொடர்பில் பேசுகையில்,

எந்த புலனாய்வுத் தகவலும் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் இனி நாம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபரை பதவி விலக கோரியுள்ளேன் . அரசியலமைப்பு கவுன்சில் பொலிஸ் மா அதிபரை தீர்மானிக்கும். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார். இதன்போது சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பொன்சேகாவை நியமிப்பது குறித்தும் இங்கு முக்கியமாகப் பேசப்பட்டுள்ளது.