பொது மன்னிப்பு வழங்குக – ஜனாதிபதி கோட்டாபயவிடம் விசேட கோரிக்கை

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவ்வேண்டுகோளிற்கு ஆதரவை வழங்கியுள்ளதுடன் அதில் கைச்சாத்தும் இட்டுள்ளனர்.

குறித்த கோரிக்கையில் மரண தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற விடயம் காணப்படுகின்றது.

2011ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08ம் திகதி அங்கொடை, முல்லேரியா பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க விவகார ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை சுட்டுக்கொலை செய்த குற்றத்திற்காக துமிந்த சில்வா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.