பொதுமக்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படும் – ரணில் உறுதி

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாட்டின் ஒவ்வொரு துறையையும் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் கூறினார்.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கீழ் மக்களுக்கு மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்கள் மற்றும் கடன்களுக்கான நிவாரணம் மற்றும் அவர்களுக்கு பணம் செலுத்துவதற்கான கால அவகாசங்களும் சலுகைகளும் வழங்கப்படும் என்று கூறினார்.

அத்தோடு இது பல நேர்மறையான முன்னேற்றங்களின் தொடக்கமாக மட்டுமே இருக்கும் என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.