பொதுமக்களிடம் மன்னிப்பு கோரிய கல்வி அமைச்சர்

எதிர்வரும் மூன்று மாதக் காலப்பகுதியில் இதுவரை தேசிய பாடசாலை அற்ற பிரதேச செயலக பிரிவுகள் 124 க்கும் தேசிய பாடசாலைகளை ஸ்தாபிப்பதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் நேற்று இடம்பெற்ற தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் வைபவத்தில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

இலங்கையில் 393 தேசிய பாடசாலைகள் உள்ளன. எனினும், இலங்கையின் 124 பிரதேச செயலக பிரிவுகளுக்கு ஒரு தேசிய பாடசாலைகள் கூட இல்லை.

பாராளுமன்றம் கலைக்கப்படும் முன்னர் 10 பாடசாலைகள் அனுமதிக்கப்பட்டன.

குருணாகலையில் 4 பாடசாலைகள், பொலன்னுவைக்கு 4 பாடசாலைகள். எனினும் இலங்கையில் உள்ள 124 பிரதேச செயலக பிரிவுகளுக்கு ஒரு தேசிய பாடசாலைகள் கூட இல்லை.

எதிர்வரும் மூன்று மாதக்காலப் பகுதியினுள் 124 பிரதேச செயலக பிரிவுகளுக்கும் தேசிய பாடசாலைகளை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதியும் பிரதமரும் எனக்கு கூறினார்கள்.

இன்று நான் ஒரு தவறை செய்துள்ளேன். நானே பாடசாலைகளுக்கு அனுப்பி வைத்த சுற்றறிக்கை. பாடசாலைகளில் அரசியல்வாதிகள் கலந்து கொள்ளும் வைபவங்களை ஒரு மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்த வேண்டும் என்று.

இன்று இந்த வைபவம் 8.30க்கு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 11.00 மணி ஆகி விட்டது. கல்வி அமைச்சரின் உத்தரவு டளஸ் அழகப்பெருவினால் மீறப்பட்டுள்ளது. மன்னித்துக் கொள்ளுங்கள் என்றார்.