பொதுத் தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஆதரவு யாருக்கு?

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தற்போதைய அரசாங்கத்திற்கு பாராளுமன்றினுள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முழு ஆதரவையும் பெற்றுத் தருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

களுத்துறை பாடசாலையொன்றில் நேற்று (10) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.

நாட்டுக்கு புதிய ஒரு பயணத்தை எதிர்பார்த்து கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதவளிக்க ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி நடவடிக்கை எடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.