பொதுத் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் முழு ஆதரவும் கோட்டாவுக்கே – மைத்திரி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபயவுக்கே முழு ஆதரவையும் வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய தற்போதைய அரசாங்கத்திற்கு நாடாளுமன்றினுள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முழு ஆதரவையும் பெற்றுத்தருவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

களுத்துறை பாடசாலையொன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு புதிய ஒரு பயணத்தை எதிர்பார்த்து கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதவளிக்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.