பொதுத்தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி!

பாராளுமன்ற பொதுத்தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

மார்ச் 2 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைக்கலாமா என்பது குறித்து ஜனாதிபதியின் செயலாளர் சட்ட மா அதிபரிடம் வினவியதையடுத்து ,அதற்கு சட்டச் சிக்கல் இல்லையென முன்னதாக சட்ட மா அதிபரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி மார்ச் 2 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் மார்ச் 6 முதல் 11 ஆம் திகதிக்குள் வேட்புமனுக்களை பெறவும் ,ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை நடத்தவும் தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.