பொதுத்தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் ஆரம்பம்?

பொதுத்தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிட தயாராகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரச அச்சகத்திற்கு நேற்றையதினம் 28.05.2020 அறிவித்துள்ளது.

பொதுத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான இறுதி தீர்ப்பு வெளியானதும், தேர்தல் இடம்பெறும் தினம் அறிவிக்கப்படும்.

அதன் பின்னர் வாக்குச் சீட்டுக்களை அச்சிட வேண்டியதன் தேவையை தேர்தல்கள் ஆணைக்குழு அரச அச்சகத் தலைமை அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய தேவையான நடவடிக்கைகளை திட்டமிட்டு வருவதாக அரச அச்சகத்தின் தலைவர் திருமதி கல்பனா லியனகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.