பொதுத்தேர்தலில் மாறுபட்ட சூழ்நிலையின் கீழ் களமிறங்கவுள்ளேன்

இம்முறை பொதுத் தேர்தலில், ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியதை விட மாறுபட்ட சூழ்நிலையின் கீழ் களமிறங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதி தேர்தலுக்கு எமது எதிர்தரப்பினர்களுக்கு இருந்த கால நேரம் எமக்கு இருக்கவில்லை.

காரணம், எம்மை அனைத்து இடத்திற்கும் அனுப்பினர், எமக்கும் செல்ல வேண்டி ஏற்பட்டது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் எங்கும் செல்வதில்லை. அப்படி செல்ல தயாராகவும் இல்லை.இந்நாட்டிற்கு புதிய ஆற்றல் மிகுந்த ஆரம்பம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கம். என்றார்.