பொதுத்தேர்தலில் மஹிந்தவையே களமிறக்குகிறோம்- பீரிஸ்

நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் பொதுத்தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றமையை அக்கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களின் வாயிலாக அறியகூடியதாக உள்ளது.

அந்தவகையில் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள், எதிர்வரும் பொதுத்தேர்தலில் 2/3 பெரும்பான்மையை பெறுவதன் ஊடாகவே ஒரு முழுமையான அரசாங்கத்தை அமைக்க முடியுமென தெரிவித்து வருகின்றது.

இந்நிலையிலேயே மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவார் என ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.