பொதுத்தேர்தலில் இதயம் சின்னத்தில் களமிறங்கும் சஜித்!

எதிர்வரும் பொதுத்தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உருவாக்கிய புதிய கூட்டணி ‘ஒன்றுபட்ட தேசிய சக்தி’ என்ற பெயரில் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த புதிய கூட்டணி, இதயத்தை தேர்தல் சின்னமாக தேர்ந்தெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் கட்சியின் பதிவு தொடர்பான ஆவணங்கள் ஏற்கனவே தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணி மற்றும் பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக இறுதி தீர்மானம் மேற்கொள்ளும், ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானமிக்க செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

இந்த செயற்குழு கூட்டம் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 4 மணியளவில் இடம்பெறவுள்ளது.