பொதுஜன முன்னணியின் புதிய ஜனாதிபதி டிசம்பரில் பதவியேற்பாராம்

சிறிலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த, சிறிலங்காவின் புதிய ஜனாதிபதி, வரும் டிசெம்பர் 9 ஆம் நாள் பதவியேற்றுக் கொள்வார் என்று அந்தக் கட்சியின் நிறுவுநரான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தல் முதலில் நடந்தால் என்று செய்தியாளர் ஒருவர் நேற்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பசில் ராஜபக்ச, இல்லை, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் புதிய ஜனாதிபதி, வரும் டிசெம்பர் 9 ஆம் நாள் பதவியேற்றுக் கொள்வார்” என்று குறிப்பிட்டார்.

பொதுஜன முன்னணியின் புதிய ஜனாதிபதியின் கீழ், தீவிரமான திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.