பொதுஜன பெரமுனவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்க ஐ.தே.க தயார்!- அநுர

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்க சில ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அநுர மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசிய கட்சிக்கு, எதிர்க்கட்சிக்கான நடவடிக்கைகளை தற்போது முன்னெடுக்க முடியவில்லை.

மேலும் மஹிந்த தற்போது மூன்றில் இரண்டு பலத்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்து வருகின்றார். எனினும் நாங்கள் அதற்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை.

ஆனால் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர் மஹிந்தவின் தீர்மானத்துக்கு ஆதரவு வழங்க தயாராக இருக்கின்றனர்.

எனவே பெறுமதிமிக்க வாக்குகளை பாதுகாக்க வேண்டுமாயின் மக்கள் தேசிய சக்திக்கே அனைவரும் வாக்களிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.