பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியுட ஒன்றிணைந்த எதிர்க்கட்சி முடிவு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்தில் இருந்து விலகாவிடில், அவர்களுடன் இணையாதிருக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

நேற்று பிற்பகல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிட இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY