பொங்கலை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களை சந்தித்தார்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் மோடி, கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். நடிகர் ரஜினிகாந்த்தும் டுவிட்டர் வாயிலாக தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களை சந்தித்தார். கோபாலபுரம் இல்லத்தில் வைத்து தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதி. கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவிக்க கோபாலபுரம் இல்லத்தில் அதிக அளவில் தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

கோபாலபுரம் வீடு பிரமாண்டமாக அலங்கரிக்கப்படிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் காலை முதலே வீட்டின் முன் குவியத் தொடங்கினர். இந்த சந்திப்பின் போது டிஆர் பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY