பேஸ்புக் நிறுவனம் செய்த மோசடி அம்பலம்!

Facebook-IPO-presentationபிரிட்டனில் நூறு கோடி ரூபாய்க்கும் மேல் சம்பாதித்துள்ள பேஸ்புக், வெறும் நான்காயிரம் பவுண்டுகளை மட்டுமே கடந்த ஆண்டு வருமான வரியாக செலுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும், கோடிக்கணக்கான பயனாளர்களைக் கொண்ட பேஸ்புக், கடந்த ஆண்டு மட்டும் பிரிட்டனில் நூறு கோடி ரூபாய்க்கும் மேல் சம்பாதித்துள்ளதாக நம்பப்படுகின்றது. ஆனால், பேஸ்புக் நிறுவனம், பிரிட்டனில் நஷ்டத்தில் நடப்பதுபோல கணக்கு காண்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.

பேஸ்புக் தமது நிறுவனத்தின், 34.5 மில்லியன் மதிப்பிலான பங்குகளை பணிபுரிபவர்களுக்கு பகிர்ந்தளித்துள்ளது. இதனை போனஸ் திட்டத்தின் கீழ் வழங்கியுள்ளது. இதன்படி, ஒரு அடிப்படை பணியாளர் கூட குறைந்தபட்சம் ஒரு லட்சம் பவுண்டுகளை தமது வருமானமாகப் பெறுவதாக கணக்கு காண்பித்துள்ளது என இந்நாட்டின் தொழிலாளர் கட்சி எம்.பி. மார்கரேட் ஹோட்ஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், இந்நிறுவனம் வரியைத் தவிர்ப்பதற்கென தேவையில்லாத உள் கட்டமைப்பையும், செயற்கை சாதனங்களையும் மாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின், சாதாரண கூலிகூட ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஆயிரம் பவுண்டுகள் வருமான வரியாக செலுத்தும் வேளையில், பேஸ்புக் கடந்த ஆண்டு வெறும் நான்காயிரத்து முந்நூற்று இருபத்தேழு பவுண்டுகளை மட்டுமே செலுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY