பேச்சுவார்த்தைக்கு தயார் – ரணிலுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தாம் பேச்சுவார்த்தைக்கு தயார் என ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களுடன் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயலாற்றுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தபடுமானால் அதற்கு எமது தரப்பும் தயாராகவுள்ளது.

இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

அனைவரது கருத்துக்களையும் இணைத்துக் கொண்டு பயணிப்பது அவசியமானது.

ஐக்கிய தேசிய கட்சியிடம் இது தொடர்பில் கருத்துகள் மற்றும் தீர்மானங்கள் காணப்படுமாயின் நாம் அதனை சிறந்த ஒரு விடயமாக நோக்குகின்றோம்.

இரு சாராரும் பொறுப்புக்களை வழங்குதல் மற்றும் எதிர்காலம் குறித்து கலந்துரையாடி தீர்மானமொன்றை மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.