பெப்ரல் அமைப்பு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதம்

தொடர்ச்சியாக மாகாண சபைகள் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு அதிருப்தியைத் தெரிவித்து, பெப்ரல் அமைப்பு மீண்டுமொரு தடவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

இதுவரை 6 மாகாண சபைகளின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ளதுடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறையடையவுள்ளதாகவும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே மக்கள் இறைமையான தேர்தல் உரிமையை பாதுகாக்கக் கூடிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளை ஜனாதிபதியும் பிரதமரும் மேற்கொள்ள வேண்டுமென்றும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.