பெண்ணை சுட்டுக்கொன்ற வழக்கு 11 பேருக்கு மரண தண்டனை மேற்கு வங்காள கோர்ட்டு தீர்ப்பு

gavel-300x199மேற்கு வங்காள மாநிலம் கிருஷ்ணாநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், 55 குடும்பத்தினருக்கு சொந்தமான ஒரு விவசாய நிலத்தை ஆயுதம் தாங்கிய ஒரு கும்பல் ஆக்கிரமிக்க முயன்று வந்தது.

கடந்த 2014–ம் ஆண்டு நவம்பர் 23–ந்தேதி, அந்த கும்பல், நிலத்தை பறிக்க துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளுடன் டிராக்டர்களில் வந்தது. அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே, அக்கும்பல் வெடிகுண்டுகளை வீசியதுடன், சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது.

அதில், அபர்ணா பேக் என்ற பெண், குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த கிருஷ்ணாநகர் கூடுதல் செசன்சு கோர்ட்டில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பார்த்தசாரதி முகர்ஜி உத்தரவிட்டார்.

LEAVE A REPLY