பெண்களை போதைப்பொருளாக பார்ப்பதை நிறுத்த வேண்டும்: மஞ்சிமா மோகன்

சமீபத்தில், பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகைகள் சனுஷா, அமலாபால் ஆகியோர் துணிச்சலாக போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து அவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். சனுஷா, அமலாபால் ஆகியோரின் துணிச்சலுக்கு போலீசாரும், கலைத்துறையினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள மஞ்சிமாமோகன், ‘பெண்கள் முன்பைவிட இப்போது பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று, நான் எனது சகோதரனிடம் தெரிவித்தேன். ஆனால், தற்போது நடக்கும் சில சம்பவங்களைப் பார்த்தால் நடவடிக்கை போதாது என்றே தோன்றுகிறது. பெண்களை போதைப் பொருளாக பார்ப்பதை நிறுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதைபார்த்த ஒரு ரசிகர், ‘தயவுசெய்து சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள். தற்போது கன்னித் தன்மையை காப்பது மிகவும் கடினம்’ என்று விமர்சனம் செய்தார். இதற்கு பதில் அளித்துள்ள மஞ்சிமா, ‘திருமணம் தான் தீர்வா? இது கன்னித்தன்மையை மட்டும் பற்றியது இல்லை. சுயமரியாதையும் காப்பது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

LEAVE A REPLY