பெண்களின் உரிமைகளை பாதுகாக்க இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது!

Maithripala-Sirisena-13-July-15-Prz-media-பெண்களின் உரிமைகளை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது தொடர்பில் தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடனும் பொருப்புடனும் செயற்பட்டு வருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பால்நிலை சமத்துவம் மற்றும் மகளிர் வலுவூட்டல் தொடர்பாக நியூயோர்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பெண்களை வலுவூட்டுவதற்கும் பால்நிலை சமத்துவத்திற்கும் மிகுந்த அர்ப்பணிப்போடு செயற்படுவதற்குப் பொருத்தமான காலம் உருவாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் புதிய அரசியலமைப்பை உருவாக்கி நாட்டின் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY