புலம்பெயர் அமைப்புக்களுக்கு எதிரான தடை நீக்கம் சரியானதே – அரசாங்கம்

indexபுலம்பெயர் அமைப்புக்களுக்கு எதிரான தடை நீக்கம் சரியானதே என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட பட்டியலில் இணைக்கப்பட்டிருந்த சில புலம்பெயர் அமைப்புக்கள், தனிப்பட்ட நபர்கள் மீதான தடை அண்மையில் அரசாங்கத்தினால் நீக்கப்பட்டிருந்தது.


இந்த தடை நீக்கம் நியாயமானது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். உயர்மட்ட குழுவினரால் நடத்தப்பட்ட தீவிர ஆய்வுகளின் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட இயக்கங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களின் நடவடிக்கைகள் செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்தே தீர்மானம் எடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். தடை நீக்கப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் கடந்த மூன்றாண்டு காலப்பகுதியில் எவ்வித பயங்கரவாத செயற்பாடுகளிலும் ஈடுபடாதவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY