புலமைப்பரிசில் பரீட்சை, உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பு? – அமைச்சர் கருத்து

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் 2020 உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பான முடிவை இன்று அல்லது நாளை அறிவிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கம்பாஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவியமை காரணமாக ஒக்டோபர் 11 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்க அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

கொரோனா வைரஸ் தாம் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் 2 ஆம் தவணை விடுமுறை அளிக்கப்பட்டதுடன் கொழும்பு மாவட்டத்திலும் பிரத்தியேக வகுப்புகளுக்கு கல்வி அமைச்சு தடை விதித்திருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக இறுதி முடிவு மற்றும் பரீட்சைகளுக்கான புதிய திகதி குறித்து இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் முடிவு செய்யப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் அதே நேரத்தில் க.பொ.த. உயர்தர பரீட்சை ஒக்டோபர் 12 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நவம்பர் 06 வரை நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.