புத்தாண்டிலாவது இராணுவம் வெளியேறட்டும்:முன்னாள் முதல்வரது பிரார்த்தனை!

மக்களிடையே ஒற்றுமையையும், சிங்கள மக்களிடையே குறிப்பாக சிங்களத் தலைவர்களிடத்தே நல்ல மனமாற்றத்தையும் ஏற்படுத்தி அனைவரும் சம உரிமைகளுடன் வாழும் நிலைக்கு இப்புத்தாண்டு கால்கோள் அமைக்கும் என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்துள்ளார் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்.

அவர் விடுத்துள்ள புத்தாண்டு செய்தியில் காணாமற் போன தமது உறவுகள் பற்றி விபரங்கள் தேடுவோர் தம் வாழ்வில் அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவடைய வேண்டும். மேலும் வேலையில்லாது தவிக்கும் எமது இளம் உறவுகளுக்கு வாழும் வழியை இறைவன் வகுத்துக் கொடுக்கவேண்டும். ஆரச படைகள் இவ்வாண்டில் எமது தாயக மண்ணில் இருந்து வெளியேறவேண்டும். எமது வடகிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் நேரடியாகவோ மறைமுகமாகவோ எமது காணிகளைக் கையேற்பதையும் வெளியார்களைக் குடியேற்றுவதையும் நிறுத்தவேண்டும். இவ்வாறான பல எதிர்பார்ப்புக்களுடன் இப்புதிய ஆண்டை வரவேற்பதில் உங்களுடன் நானும் இணைந்துகொள்கின்றேனெனவும் அவர் தெரிவித்துள்ளார்.