புத்தளத்தில் ஊரடங்கு

புத்தளம் மாவட்டத்தில் இன்று (18) மாலை 4.30 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுலாகும் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக இத்தாலியில் இருந்து நாடு திரும்பியோர் புத்தளத்தில் அதிகம் இருப்பதால் அம்மாவட்டத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கும் நோக்கில் இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.

இதேவேளை நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு சட்டம் அமுலாகவுள்ளது.