புதிய நாடாளுமன்றம் கூடியுள்ள நிலையில் ரணில் எடுத்துள்ள முடிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமை தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படும் வரை தேசிய பட்டியல் எம்.பி.யை நியமிக்க முடியாது என கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

ஐ.தே.கட்சியின் மூத்த உறுப்பினரான ஜோன் அமரதுங்க இந்த தகவலை ஆங்கில ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார்.

புதிய தலைவர் தெரிவாகும் வரை தேசிய பட்டியல் எம்.பி. நியமனம் தாமதமாகும் என அவர் மேலும் கூறுகிறார்.

தற்போது நான் தேசியப் பட்டியலில் முன்னணியில் உள்ளேன், அதே போல் மூத்த உறுப்பினராகவும் இருக்கிறேன்.

தேசிய பட்டியல் இடத்திற்கு பொருத்தமான நபர் என்றாலும், கட்சி எடுக்கும் முடிவுக்கு தாம் கட்டுப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.