புதிய தலைவர் மற்றும் கட்சி மறுசீரமைப்பு குறித்து செப்டம்பர் முதல் வாரத்தில் முடிவு

தேசிய பட்டியல் ஆசனம் அல்லது கட்சி தலைமை குறித்து ஒரு முடிவும் எட்டப்படாமலே ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நிறைவு பெற்றுள்ள நிலையில் இறுதி முடிவு எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தை அடுத்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் சட்டத்துறை செயலாளர் நிஸ்ஸங்க நாணயக்கார, கட்சிக்கு புதிய தலைவர் குறித்த இறுதி முடிவு மற்றும் கட்சியை மறுசீரமைப்பது குறித்து எதிர்வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என கூறினார்.

அவர் எள்ளலும் தெரிவிக்கையில், “புதிய தலைவர் மற்றும் கட்சியை மறுசீரமைப்பது குறித்த இறுதி முடிவு செப்டம்பர் முதல் வாரத்தில் எடுக்கப்படும். இதன் பொருள் புதிய தலைவர் குறித்த இறுதி முடிவு ஒரு வாரத்தில் எடுக்கப்படும் என்பதே” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“புதிய தலைவர் கட்சி மற்றும் செயற்குழுவின் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று செயற்குழுவின் கருத்தாக உள்ளது.

பலரின் கோரிக்கையைத் தொடர்ந்து தலைமைத்துவத்தை ஏற்க அவர் தயாராக இருக்கிறார் என்பதே முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய முன்வைத்த முன்மொழிவு தொடர்பாக செயற்குழு உறுப்பினர்களின் நிலைப்பாடு” என கூறினார்.