புதிய சந்திரமுகி ஆகிறார் தமன்னா

Kollywood-news-15223ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தை பி.வாசு இயக்கினார். ஆவி சம்பந்தபட்ட கதையாக உருவான இதில் சந்திரமுகியாக ஜோதிகா நடித்திருந்தார். ஏற்கனவே இப்படத்தை கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற பெயரில் இயக்கி இருந்தார். இதில் விஷ்ணுவர்தன் நடித்திருந்தார். இப்படத்தைத்தான் தமிழில் சந்திரமுகி என்ற பெயரில் ரீமேக் செய்தார். இப்படம் திரைக்கு வந்து வெற்றி பெற்றது. இதையடுத்து கன்னடத்தில் ஆப்தமித்்ராவின் 2ம் பாகமாக ‘ஆப்தரக்‌ஷகா’ உருவாக்கினார். இதையே சந்திரமுகி 2ம் பாகமாக தமிழில் இயக்க முடிவு செய்திருந்தார் பி.வாசு. ஆனால் ரஜினி நடிக்காமல் மவுனம் சாதித்தார். தற்போது இந்த முயற்சியை மீண்டும் தூசி தட்டி இருக்கிறார் பி.வாசு. சந்திரமுகி 2ம் பாகத்தில் தமன்னாவை ஹீரோயினாக்க எண்ணி உள்ளார். இதுதொடர்பாக அவரிடம் கால்ஷீட்

பி.வாசு தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. தற்போது பாகுபலி 2 உள்பட 3 படங்களில் தமன்னா நடித்து வருவதால் அது முடிந்தபிறகு கால்ஷீட்பற்றி பரிசீலிப்பதாக அவர் தரப்பில் பதில் தரப்பட்டுள்ளதாம். இதையடுத்து புதிய சந்திரமுகியாக வலம் வர தயாராகிறார் தமன்னா. கபாலி, 2.0 படங்களில் ரஜினி நடித்து வருவதால் அவரை சந்திரமுகி 2ம் பாகத்தில் நடிக்க கேட்டு விரைவில் பி.வாசு அணுக உள்ளாராம்.

LEAVE A REPLY