புதிய சட்டம் அமுல்படுத்தும்வரை பயங்கரவாத தடைச் சட்டம் அமுலில் இருக்கும்!

President_to_launch_Sanhindiyawe_Sathwirugama_housing_project_20160323_02p2-4புதிய சட்டம் ஒன்றை உருவாக்கும் வரை பயங்கரவாதத்தடைச்சட்டம் அமுலில் இருக்கும் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பயங்கரவாதத் தடைச்சட்டம் இலங்கையில் நீக்கப்படும் என சிறீலங்கா அரசாங்கம் சர்வதேச நாடுகளுக்கும், ஐநா மனித உரிமைப் பேரவையிலும் உறுதியளித்திருந்தது.

ஆனால் தற்போது, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்குவதற்குரிய எந்தவொரு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள் ளது.

இந்நிலையில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பிலே இது தொடர்பில் கருத்துக் கேட்டபோது,

1979ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 48ம் இலக்க பயங்கரவாதத் தடைச்சட்டம் ரத்துச்செய்யப்படவுள்ளபோதிலும் புதிய சட்டம் அமுல்படுத்தும் வரையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY