புதிய கூட்டணி ஒன்றை உடனடியாக கட்டியெழுப்ப வேண்டும்

பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட உள்ள அரசியலமைப்பு சீர்திருத்தத்தை தோல்வியடையச் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியவர்களின் ஒற்றுமையினால் மட்டுமே முடியும் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

அதற்காக அவர்கள் இருவரினதும் ஒத்துழைப்புடன் புதிய கூட்டணி ஒன்றை உடனடியாக கட்டியெழுப்ப வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.