புதிய கூட்டணியில் இணைந்துகொள்ளுமாறு சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு சஜித் அழைப்பு!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய கூட்டணியில் இணைந்துகொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு குறித்த கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.

பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி சமீபத்தில் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் குமார வெல்கம உள்ளிட்ட சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுடன் ஒரு கலந்துரையாடலை மேற்கொள்வதற்கான அழைப்பையும் சஜித் பிரேமதாச விடுத்துள்ளளார்.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஹரின் பெர்னாண்டோ, புதிய கூட்டணியில் பெரும்பாலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இணைந்து கொள்வார்கள் என நம்பிக்கை விளியிட்டுள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக நாளை இடம்பெறும் ஊடக சந்திப்பில் சஜித் பிரேமதாச உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.