புதிய அரசியல் அமைப்பில் நியாயமான தீர்வொன்று தேசிய இனப்பிரச்சினைக்கு வழங்கப்பட வேண்டும் – சித்தார்த்தன்

புதிய அரசியல் அமைப்பில் நியாயமான தீர்வொன்று தேசிய இனப்பிரச்சினைக்கு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்தார்.

9ஆவது நாடாளுமன்றின் முதல் அமர்வில் இன்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது புதிய சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு வாழ்த்து தெரிவித்த அவர், நாட்டில் 70 ஆண்டுகளாக இழுபறியில் உள்ளதும், நாட்டில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினைப் பெறும் வகையில் புதிய அரசியல் அமைப்பு அமைய வேண்டும் என் குறிப்பிட்டார்.

மேலும்தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கு மஹிந்த யாப்பா உதவுவார் என தான் நம்புவதாகவும் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.