புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர் குழு நியமனம்

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழு அமைச்சரவையினால் 9 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளரான, அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் த சில்வா தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒன்றுகூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குழுவின் உறுபினர்களாக ஜனாதிபதி சட்டத்தரணிகளான மனோஹர த சில்வா, காமினி மாரப்பன, சஞ்சீவ ஜயவர்தன, சமந்த ரத்வத்த ஆகியோரும் பேராசிரியர்களான நதீமா கமுர்தீன், ஜீ.எச் பீரிஸ், வசந்த செனவிரத்ன மற்றும் கலாநிதி ஏ. சர்வேஸ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.