புதிய அரசமைப்பும் இனப்பிரச்சினைக்கான தீர்வும்

15ஆம் நூற்றாண் டின் பின்னர் அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்களுக்கு அமெரிக்கா தாயகமாகியது. அவ்வாறே 16 ஆம், 17 ஆம் நூற்றாண்டுகளின் பின்னர் கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடியேறிய ஐரோப்பியர்களுக்கு இந்த நாடுகள் தாயகமென்கிறார்கள். மத்திய காலத்தில் பாகிஸ்தானுக்குள் புகுந்த முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் தாயகமென்றால் குறைந்தபட்சம் கி.பி.13 ஆம் நூற்றாண்டில் தமக்கெனத் தனியான அரசுடன் வாழ்ந்தவர்கள் என்ற தெளிவான ஆதாரத்தைக் கொண்ட தமிழர்கள் தமது பிரதேசத்தைத் தாயகம் என்று கூறுவதில் என்ன தவறு. இதனை இலங்கை அரசும், சர்வதேச நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் புரிந்து கொள்ள வேண்டும். போர்களும் கலகங்களும் ஒரு நாட்டின் அரசியல் சுதந்திரத்தை யும் பொருளாதார சுதந்திரத் தையும் அழித்து விடலாம். ஆனால், அந்த நாட்டு மக்களுக்கு கௌரவமாக வாழவேண்டும் என்ற உள்ளார்ந்த உணர்வு இருக்கும் வரைக்கும் அவர்களின் அபிலாஷைகளையும் உரிமைகளையும் சிதைத்து விடவோ அழித்து விடவோ முடியாது. இது கடந்த கால அனுபவங்களின் பகிர்வு.
அழகிய இலங்கைத் தீவு
அழகிய இலங்கைத் தீவில் இறந்தகாலம் எமக்கு உரிமையாக்கிய பாரதூரமான துன்பங் களுடன் போராடி ஒவ்வொரு நாளையும் கழிப்பது இலங்கையர்களின் விதியாகி விட்டது. மேலெழுந்தவாரியாகக் கூறினால் அது போர் ரீதியான துயரம்போலத் தென்பட்டாலும் அதனடியில் மறைந்திருப்பது இந்த நாட்டில் உண்மை உரிமையாளர்களை அவர்தம் உரிமைகளை அனுபவிப்பதிலிருந்து நீக்கி வைத்திருக்கும் துயரமே. இதனை ஒரு வார்த்தையில் öŒõன்னால் இந்த நாட்டில் அதிகாரப் பகிர்வு தொடர்பான பிரச்சினையே நாட்டின் தேசியப் பிரச்சினையாக இருக்கின்றது. இலங்கையின் அரசியல் பிரச்சினையின் யதார்த்தம் என்னவென்றால் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமல் உண்மையான நல்லிணக்கத்தை இந்த நாட்டில் ஏற்படுத்த முடியாது என்பதாகும். இந்தக் கருத்து வாதத்தை இன்று சர்வதேச நாடுகளும் உணரத் தொடங்கிவிட்டது. இந்த அரசியல் உரிமைகள், அபிலாஷைகள் என்பன அபிவிருத்தி வா#ப்புக்களுடன் இணைந்த தாகவே அமையவேண்டும் என் பதே தமிழர் தரப்பு வாதமாகும்.
ஒற்றையாட்சியில்
தமிழருக்குப் பயனில்லை
ஒற்றையாட்சி முறைமையினுள் சிறுபான்மை இனங்களின் உரிமைகள் குறிப்பாக அரசியல் சுதந்திரம் கிடைக்கக்கூடிய வா#ப்புக்கள் மிக öŒõற்பமே என்ற கருத்தியல் தமிழ் மக்க ளின் மனங்களில் ஆழமாகப் பதிந்திருப்பதனாலேயே ஒற்றையாட்சி முறையைத் தமக்கு நட்பான முறையாக ஏற்றுக்கொள்ளவில்லை. வடக்கு, கிழக்கு இணைந்த தாயகத்தில் சுயநிர்ணய உரிமையுடனும் சுயகௌரவத்துடனும் வாழ்வதையே தமிழ் மக்கள் விரும்பு கின்றார்கள், கடந்த அரை நூற்றாண்டு காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட போர்ச்சூழல் இன்று நீங்கிய போதிலும் போரினால் ஏற்படுத்தப்பட்ட வடுக்கள், வலிகள், சுமைகள் இன்றும் மக்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. சிறைகளில் விŒõர ணைகளின்றி இளைஞர், யுவதிகள் வாடுகின்றனர். போரின் போது காணாமற்போனவர்கள், öŒõந்த இடங்களில் மீள் குடியேற்றமின்றி இன்றும் நலன்புரி நிலைய வாழ்வை அனுபவிப்பவர்கள்.
இவற்றைவிட நில ஆக்கிரமிப்புக்களும் அவற்றுக்கான முனைப்புக்களும் நாளுக்குநாள் அரங்கேறிக்கொண்டி ருக்கின்றன.
இத்தகைய öŒயற்பாடுகள் இன நல்லிணக்கத்துக்கு முட்டுக்கட்டையாகவே அமைந்து வருகின்றது. இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக கடந்த கால அரசுகள் மாவட்ட சபை, மாகாண சபை, சுயாட்சி முறை, 13 ஆவது திருத்தம், சமஷ்டி முறை எனப் பல்வேறு வடிவங்களில் பிரச்சினைக்கான தீர்வை முன்வைத்த போதிலும் அதன் உள்ளடக்கம் மற்றும் அரசியல் உரிமைகள் என்பன சிறுபான்மை இனங்கள் கோரி நிற்கும் உரிமையுடனான அபிலாøŒஷகளை ஈடுöŒ#ய முடியாமல் போ#விட்டது. இதனாலேயே போர் நிறுத்தமும் போரும் மாறிமாறி நாட்டை ஆக்கிரமித்துக்கொண்டது. இதனைத் தற்போது ஆட்சிப்பீடமேறியிருக்கும் நல்லாட்சி அரசு புரிந்து கொள்வது அவசியமாகும்.
ஐரோப்பியர்களின் ஆதிக்கம்
நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஐரோப்பியர்களின் ஆதிக்கக் கொடிகள் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பறக்கத் தொடங்கியது. ஆனால், இன்றும் அந்அதக் கொடிகள் இறக்கப்படாமல் பறந்துகொண்டிருக்கின்றன. ஏகாதிபத்தியத்தின் ஒரு வடிவமாகிய காலனித்துவம் தொடர்ந்தும் உதயமாகிய வண்ணமாக இருக்கின்றது.
ஒரு நாட்டுக்கெதிராக இன்னொரு நாட்டைத் தூண்டிவிட்ட பிராந்திய அரசுகளில் ஓர் அரசுக்கெதிரான இன்னொரு அரசுக்கு ஆயுதங்கள் வழங்கிப் பகைமையை உருவாக்கிப் பகைமைத் தீயில் மேலைத்தேசம் இன்றும் குளிர்கா#ந்து கொண்டிருக்கின்றது. இதுவே இலங்கையிலும் இன்றும் காணக்கூடிய தாக உள்ளது.
அன்று பயங்கரவாதம் என்று முள்ளிவா#க்காலின் இறுதிப் போரின்போது பல்லாயிரக்கணக்கான உயிர்கள் மடிந்தும் அங்கவீனப்பட்டு, காணாமற்போயிருந்தபோது கண்களை மூடிக் கொண்ட சர்வதேச நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் இன்று தீர்வுக்கான வழிவகைகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன. இதுவே யதார்த்த உண்மையாகும்.
எனவே, அரசு இதனை நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும். கடந்த கால அரசுகள் விட்ட தவறை திருத்தியமைத்து நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் அரசியல் அபி லாஷைகளையும் உரிமைகளையும் மதித்து சமஷ்டி முறையில் அமைந்த அர சியல் சீர்திருத்தம் முன் வைப்பது கட்டாய கடமையாகும்.
இலங்கையின் அர சியல் அதிகாரப் பிரயோகத்தில் மத்திய அரசு மட்டுமன்றி பிராந்திய அரசுகளும் பங்குபற்றும் விதத்தில் அதிகாரமானது புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின் மூலம் பகிர்ந்தளிக் கப்பட்டிருத்தல் அவசிய மாகும். இதன் அடிப்படையில் பொருத்தமான சமஷ்டி முறை அமைதல் வேண்டும்.
சமஷ்டி முறையே சிறந்தது
குறிப்பாக அமெரிக்கா, கனடா, சுவிஸ், ஜேர்மனி, ஆபிரிக்கா போன்ற பல்லின சமூக இன மக்கள் வாழ்கின்ற நாடுகளில் இந்தச் சமஷ்டி முறை சிறப்பான நடைமுறையில் காணப்படுவதுடன், இந்தியாவில் 28 மாநிலங்களைக் கொண்ட தான அரை சமஷ்டி முறையும் காணப்படுகிறது.மேற்குறிப்பிடப்பட்ட நாடுகளின் அரசியல் ரீதியான அதிகாரப் பகிர்வைப் போன்தொரு சமஷ்டி முறையே இலங்கையிலும் மேற்கொள்வதன் மூலம் ஐக்கியப்பட்ட ஒரு நாட்டை நோக்கி இன்பமாக வாழும் ஒரு சமூகமாக மாறி எதிர்காலம் பற்றிய ஓர் எதிர்பார்ப்பை இலங்கைத் தீவில் துளிரவைக்க முடியும் என்பது திட மாகும்.
தற்போது காணப்படும் அரசியல் சூழ் நிலையைப் பயன்படுத்திக்கொள்வதற்கு தமிழ் அரசியல் கட்சிகள் முனைப்புடன் öŒயலாற்ற வேண்டும். தம்மிடையே உள்ள கருத்து முரண்பாடுகளைக் களைந்து அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு உள் நாட்டுக்குள்ளும் வெளிநாட்டுக்குள்ளும் தீர்வு தொடர்பான விடயங்களை ஆரா#ந்து சர்வதேசத்தின் அனுசரணையுடன் இனப்பிரச்சினைக்கு நிரந் தரத் தீர்வைக் காண்பதற்கு முன்வரவேண்டும். இதுவே காலத்தின் தேவையும் மக்களின் வேண்டுதலுமாகும்.

LEAVE A REPLY